Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

1000 தியேட்டர்களில் ரீ – ரிலிஸ் செய்யப்படும் ’ஆளவந்தான்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கமல் நாயகனாகவும்  வில்லனாக  இரண்டு வேடங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில், “எழிலோடும்.. பொழிலோடும்.. ‘ஆளவந்தான்’ விரைவில் வெள்ளித்திரையில்.” என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News