நடிகர் சிம்பு, மதுப் பழக்கத்தைக் கைவிட்டு ஒரு வருடமாகிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் ‘மாநாடு’.
இந்தப் படத்தின் ஒரு பாடல் நேற்றைக்கு வெளியிடப்பட்டது. இதையொட்டி டிவிட்டர் ஸ்பேஸில் படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து கலந்துரையாடல் நடத்தினார்கள்.
இதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் நடிகர் சிம்பு பேசும்போது, , “நான் குடிப் பழக்கத்தை நிறுத்தி ஓரு வருஷமாச்சு. அதுலேயும் பிரேம்ஜி மாதிரி ஆளுககூடவே இருந்தும் நான் குடிக்காமல் இருந்தது பெரிய விஷயம்..” என்று நகைச்சுவையாகக் கூறினார்.