ஒரு பாடலால் ஒரு திருமணமே நடந்த சம்பவத்தை பத்திரிகையாளர் மணி கூறினார்.
திரைப்படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய பணங்களை இழந்தார் கவிஞர் கண்ணதாசன். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்க வீட்டை விற்கும் நிலைக்கும் சென்றார். அப்போது எம்.ஜி.ஆர் உதவி செய்ததாகவும் செய்திகள் உண்டு.
ஆனாலும் கடன் நெருக்கடிகள் முழுமையாக தீரவில்லை. அவரது மகளின் திருமண செலவுக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். அப்போது தெய்வம் என்கிற படத்தில் பாடல் எழுத அவருக்கு அழைப்பு வந்தது. அந்த படத்திற்கு இசையமைத்தவர் வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன். அப்போது கண்ணதாசனை சோதிப்பதற்காக அவர் பல கடினமான மெட்டுக்களை வாசித்து காட்ட கண்ணதாசனோ சலிக்காமால் பாடலை சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்போது ஒரு மெட்டுக்கு ‘மருதமலை மாமனியே முருகைய்யா.. தேவரின் குலம் காக்கும் வேலையா’ என கண்ணதாசன் சொல்ல பக்கத்து அறையிலிருந்து ஓடிவந்த தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் கண்ணதாசனின் கைகளை பற்றிக்கொண்டு அப்போதே ஒரு லட்சத்தை அவரின் கையில் வைத்தார். அந்த பணம் அவரின் மகள் திருமணத்தை நடத்த உதவியாக இருந்தது.