Tuesday, January 7, 2025

கார் பந்த பயிற்சியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்து… காயங்களின்றி தப்பிய அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார், ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு தற்போது கார் பந்தயத்தில் பங்கேற்பதில் பிஸியாக உள்ளார். துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்கச் சென்றுள்ள அவர், அங்கு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 7) கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவற்றில் மோதியதால் விபத்துக்குள்ளானார். இந்த சம்பவத்தில், காரின் முன்பகுதி மிகவும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, காயமின்றி உயிர்தப்பிய அஜித், வேறு ஒரு வாகனத்தில் சென்றார்.

இன்னும் சில நாட்களில் கார் பந்தயம் தொடங்க உள்ள நிலையில், அஜித் கார்‌ விபத்துக்குள்ளானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News