சேலத்தைச் சேர்ந்த அமுதா என்ற மாணவிக்கு நேர்ந்த சோகம் கொடூரமானது. கடந்த மாதம் நடந்த விபத்தில் இவரது தாய்,தந்தை, அக்காள் மூவவரும் பலியாகிவிட்டனர்.
கணப்பொழுதில் குடும்பத்தையே இழந்து நிற்கதியாக நிற்கிறார். இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் உதவி செய்திருக்கிறார். தவிர வாழ்க்கை முழுதும் சகோதரனாக துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார்.
டி.இமானை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.