டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுவேன் என தெரிவித்துள்ளார் எடிட்டர் பிலோமின் ராஜா.
லோகேஷ் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து எடிட்டிங் செய்வது இவர்தான். சமீபத்தில் ஒரு பேட்டியில், “எடிட்டிங் நேரத்தில் பெரும்பாலும் லோகேஷ் எண்ணமும் எனது எண்ணமும் ஒத்துப்போய்விடும். ஆனால் சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. அப்போது கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்வோம்.. சண்டை போடுவோம்.
பிறகு யார் சொல்வது சிறப்பாக இருக்கறதோ அதை ஒப்புக்கொள்வோம்.
தனிப்பட்ட விசயத்துக்காகவா சண்டை போடுகிறோம்… திரைப்படத்துக்கா.. ஒரு படைப்பு சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தானே” என்று கேள்வி கேட்கிறார் பிலோமின் ராஜா.
சரியான கேள்விதான்!