வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். அவரின் 68-வது படமான இதில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், செல்வராகவன், சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். விஜய், இதில் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. அடுத்து, ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்துள்ளனர். அங்கு டிச.2-ம் தேதி முதல் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதை முடித்துவிட்டு,படக்குழு துருக்கி செல்கிறது.