Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘கர்ணன்’ படப் பாடல் வரிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’.

மேலவளவு பஞ்சாயத்து யூனியனின் தலைவரான முருகேசன் கொலை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றனர். இதுவரையிலும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ‘பண்டாரத்தி சக்களத்தி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்போது இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகளை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் நடிப்பில் வெளியாக உள்ளது கர்ணன்’ என்ற திரைப்படம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி – சக்களத்தி’ என்ற வார்த்தைகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பண்டார சமுதாய மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்களை தாழ்த்தி பேசும் வகையில் உள்ளது. எங்கள் சமுதாய மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர்.

சக்களத்தி’ என்று அந்த பாடல் வரி அமைந்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வாழும் ‘பண்டாரம்’, ‘ஆண்டிப் பண்டாரம்’, ‘ஜங்கம்’, ‘யோகிஸ்வரர்’ ஆகிய சமுதாய மக்களின் உணர்வுகளையும், நன்மதிப்பையும் கெடுக்கும் வண்ணம் உள்ளது. இந்தப் பாடல் வரிகள், சினிமா கிராபிக்ஸ் சட்டம் 1952க்கு எதிரானது.

இது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்தும், நன்மதிப்பை கெடுக்கும் வகையில், பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்தப் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று தணிக்கை துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ஏற்புடையதல்ல. சினிமாட்டோகிராபி சட்டத்தின்படி ஏற்புடையது அல்ல.

‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடலில் உள்ள ‘பண்டாரத்தி – சக்காளத்தி’ என்ற பாடல் வரிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். பண்டாரத்தி – சக்களத்தி’ என்ற பாடலை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தனுஷ் நடித்து ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக உள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று அந்த மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும், மனுதாரர் கோரிக்கை குறித்து, தணிக்கை துறையின் அலுவலர், தயாரிப்பாளர் கலை புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் , உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News