Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அப்டேட் கேக்குறதுக்கு விவஸ்தையே இல்லையா? அஜித் ரசிகர்கள் மீது நெட்டிசன்கள் கோபம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‘வலிமை’. இப்படம் படமாக்கப்பட்ட சமயத்தில் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் படக்குழுவினர் கொடுக்கவில்லை என்பதால், இது தொடர்பாகப் பிரபலங்களிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இது சமூக வலைதளத்தில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இதைத் தாண்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள். கடந்த 2021-ல் சென்னையில் இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொயின் அலியிடம் வலிமை பட‌ அப்டேட் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதேபோல், இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியின் அஜித்குமாரின்‌ ‘விடாமுயற்சி’ பட‌ அப்டேட் கேட்டு சிறுவன் ஒருவன் பதாகை ஏந்திய காட்சி வைரலாகி வருகிறது. 2-வது இன்னிங்ஸில் இந்தியா முதல் ஓவரில் பேட்‌ செய்த போது சிறுவன்‌ தனது கையில் விடாமுயற்சி‌‌ தனது கையில் இருந்த பதாகையை காண்பித்து‌ கேட்டிருந்தார். அது நேரலை

நெட்டிசன்கள் பலரும், ” அப்டேட் கேட்பதற்கு இடம் பொருள் ஏவல் இல்லையா.. விவஸ்தை இல்லாமல் கண்ட இடத்தில் கேட்பதா” என பதிவிட்டு வருகின்றனர்.

 

- Advertisement -

Read more

Local News