Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி கோட் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், லைலா, பிரேம்ஜி, வைபவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி இருந்தது பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான புதிய கீதை படத்தில் அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என ரஜினிகாந்த் படத்தின் ரெஃபரன்ஸை வைத்து இருப்பார் விஜய் தற்போது அதே போல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யுவன் இசையில் பாட்டுப் பாடி அதிரடி ஆட்டம் போட்ட இப்பாடலில் நடிகர்கள் அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்து சிறப்பித்துள்ளார்.

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கான லிரிக்ஸ்கள் இப்பாடலில் இடம்பெற்றாலும் அதனை தாண்டி நன்றாக உற்று கவனித்தால் இப்பாடலில் தரமான சம்பவத்தை செய்துள்ளார் வெங்கட் பிரபு.அஜித் சூர்யா மட்டுமின்றி கார்த்தி மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களின் ரெஃபரன்ஸ்களை சைலன்டாக உள்ளே கொண்டுவந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.

தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ல் வீடியோவில் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களின் மினியேச்சர்கள் ரெஃபரன்ஸ்களாக கொண்டு வந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, பிரியாணி மற்றும் மாநாடு படங்களின் ரெஃபரன்ஸை தான் வெங்கட் பிரபு இந்த பாடலில் வைத்து இருக்கிறார். இவற்றையெல்லாம் பாடலில் இடம்பெறும் முன் கண்டிப்பாக விஜய் இவற்றை பார்த்து சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இப்பாடல் வெளியாகி இருக்கிறது.இவை அனைத்து ரசிகர்களையும் அரவணைக்க விஜய் செய்த முயற்சியின் தான் என இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News