Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘சல்பேட்டா’ படத்திற்காக ஆர்யாவை இயக்கி வரும் பா.ரஞ்சித்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் சமீபத்திய ஆச்சரியமான விஷயம் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா நடிப்பதுதான்..!

எந்தவகையிலும் தொடர்பேயில்லாத இந்த இருவர் கூட்டணி இந்தப் படத்திற்காக இணைந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். இவர்கள் இணையும் படத்திற்கு ‘சல்பேட்டா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஆர்யா குத்துச் சண்டை வீரராக நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குத்துச் சண்டை வீரராக நடிக்கும் ஆர்யாவுக்கு குத்துச் சண்டை காட்சியில் நடிப்பது எப்படி என்று இயக்குநர் பா.ரஞ்சித் சொல்லிக் கொடுக்கும் புகைப்படம்தான் அது.

மேலும் இந்தப் புகைப்படத்தில் பின்புலத்தில் 1980-களில் வெளிவந்த ’புவனா ஒரு கேள்விக்குறி’, ’கவிக்குயில்’, ’மன்மதலீலை’ போன்ற திரைப் படங்களின் போஸ்டர்கள் இருப்பதால் இந்தப் படம் 1980-களில் நடிக்கும் கதை என்பதும் புரிகிறது.

இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் தொடர்ந்து முணுமுணுத்த ஒரே கேள்வி.. ஆர்யா, பா.ரஞ்சித் இவர்கள் இருவரில் யார், யாரை முதலில் அப்ரோச் செய்திருப்பார்கள் என்பதுதான்.

நாம் விசாரித்தபோது ஆர்யாதான் தனது படத்தை இயக்க பா.ரஞ்சித்திற்கு அழைப்பு விடுத்தாராம். ஒரு மிகப் பெரிய மும்பை நிறுவனத்திற்காக தனது சிஷ்யர்கள் 5 பேரை வைத்து தொடர் திரைப்படங்கள் தயாரிப்பை வேகவேகமாகத் துவக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யாவின் படத்திற்காக அதனைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வந்திருக்கிறாராம்.

- Advertisement -

Read more

Local News