Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

விஜய் சேதுபதியைத் தொடரும் தனுஷ்..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போதைய நிலையில் தமிழ்ச் சினிமாவில் மிக அதிகமான படங்களைக் கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதிதான்.

சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’, வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, எம்.மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘நவரசா’, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ என்று கைவசம் விரல்களையும் தாண்டிய படங்களை வைத்திருக்கிறார்.

இதற்கு ஊடாகவே சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த ‘மாஸ்டர்’ படமும் திரைக்கு வரத் தயாராக இருக்கின்றன.

இந்த நேரத்தில் நடிகர் தனுஷும் வரிசையாக படங்களை ஒப்புக் கொண்டே வருகிறார். இப்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர்களையடுத்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவஹர், வெற்றிமாறன், அருண் மாதேஸ்வரன் ஆகியோரும் தனுஷுக்கான ஸ்கிரிப்ட்டுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கூடுதலாக ‘ராட்சஸன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமாரும் தனுஷை வைத்து இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு அறிவியல் புனைவுக் கதையை தனுஷூக்காகத் தயார் செய்திருக்கிறாராம் இயக்குநர் ராம்குமார். இந்தப் படமும் அடுத்த வருடம் துவங்கவிருக்கிறதாம். படத்திற்கு ‘வால் நட்சத்திரம்’ என்று பெயர்கூட வைத்துவிட்டதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News