‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இது அஜித் குமாரின் 64வது திரைப்படமாகும். தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படம், பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது. பல மொழிகளில் வெளியாகும் இப்படம், மிகப்பெரிய தயாரிப்பு அளவில் உருவாக இருப்பதாகவும், வழக்கத்தை விட அஜித் குமாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே நேரத்தில், இப்படத்தில் அஜித்துடன் மேலும் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை உறுதிப்படுத்தப்படாததாயினும், விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

