பிரபல இந்திய நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், படங்களில் கதாநாயகிகளுக்கு எதிரான பாகுபாடு பற்றி அவர் பேசியுள்ளார். பல நேரங்களில், ஹீரோக்களை அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதப்படுகின்றன எனவும் கதாநாயகிகளுக்கு பெரும்பாலான படங்களில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘ஹீரோக்களுக்காக மட்டும்தான் படங்கள் எடுக்கிற மாதிரி தெரியுது. ஏன்னா, முழு படமும் ஹீரோவைப் பத்தித்தான். ஹீரோயின்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஹீரோக்களுக்காகத்தான் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹீரோயின்கள் கவர்ச்சியைக் காட்டத்தான் இருக்காங்க’ என்றார்.