சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி, தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்குப் பின்பு அவர் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

இதற்குப் பின்பு ரஜினிகாந்த் யார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூலி வெளியீட்டிற்குப் பின்பு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் அது உறுதியாகவில்லை.
இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் நாக் அஷ்வின் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக் கதையையும் கேட்ட ரஜினி, ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. நாக் அஷ்வின் அடுத்ததாக கல்கி 2989 ஏடி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார். எனினும், அந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது. மேலும், பல தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்களும் ரஜினிகாந்தை சந்தித்து கதைகள் கூறியுள்ளனர். ஆனால், ரஜினிகாந்த் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.