வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம்தான் அடுத்து ஓ.டி.டி.யில் வெளியாகவிருக்கும் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்று தமிழ்த் திரையுலகத்தில் அடித்து சொல்கிறார்கள்.
இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கிரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், செல்வா படத் தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
வரும் தீபாவளி அன்று நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனின்’ தரிசனம் Hot Star மூலம் ரசிகர்களின் வீட்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.