தெலுங்கில் வெற்றி பெற்ற ‘கோர்ட் ஸ்டேட் வெர்சஸ் நோபடி’ திரைப்படத்தின் ரீமேக் தமிழில் தயாராகிறது . இந்த படத்தில் நடிகை தேவயானியின் மகள் இனியா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பிரியதர்ஷி கதாப்பாத்திரத்தில் பிரசாந்த், கதாநாயகனாக தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக் மற்றும் சாய் குமார் பாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உறுதியானால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தை தியாகராஜனும் மகன் பிரசாந்தும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும்.