அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை 10 லட்சம் டிக்கெட்கள் மேல் விற்பனையாகியிருப்பதாகக் கூறப்படுகிறது, இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம் இதுவரை ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வெளிநாடுகளிலும்கூட இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் ஜப்பானிலும் வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.