சமீபத்தில் மலையாள மொழியில் மோகன்லால் நடிப்பில் வெளியான “தொடரும்” என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதிலும் இதுவரை 200 கோடிக்கு மேற்பட்ட வசூலையை எட்டியுள்ளது. இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோர் மட்டுமன்றி, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பலரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த வரிசையில், தீய போலீஸ் அதிகாரியாக நடித்த மூத்த வில்லன் பினு பப்பு மற்றும் இந்த திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமான பிரகாஷ் வர்மா ஆகியோரும் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

மேலும், சில காட்சிகளில் மட்டும் தோன்றினாலும், இந்தக் கதையில் முக்கிய திருப்புமுனையாக செயல்படும் வில்லன் பிரகாஷ் வர்மாவின் மகளாக நடித்த ஆர்ஷா பைஜூ என்பவர் தற்போது ரசிகர்களிடம் பெரிதும் கவனிக்கப்படுகிறார். குறிப்பாக, படம் முடிவில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் அவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோகன்லாலுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி சமீபத்தில் ஆர்ஷா பைஜூ கூறியதாவது, “மோகன்லாலை பார்த்து வளர்ந்த நான், இன்று அவருடன் நடித்து இருப்பது என் கனவு நிறைவேறிய தருணமாகும். அவர் ஒரு காட்சியில் ரீடேக் வேண்டிய நிலை ஏற்பட்டால், ‘நீ வளர்ந்து வரும் நடிகைதான், வயதில் இளமை கொண்டவள்’ என்பதுபோல யாதொரு எண்ணமும் இல்லாமல், ‘மன்னிச்சுக்கோ மகளே, இன்னொரு டேக் போகலாமா?’ என நினைத்தளவுக்கு பணிவுடன் கேட்பார்.
அதேபோல, ஒரு காட்சியின் போது ‘மகளே, இந்த காட்சிக்குப் பரந்த கோணம் (டைட் ஃப்ரேம்) வைத்திருக்கிறார்கள். அதனால் சற்று நகர்ந்து நில்’ என எளிமையாக அறிவுறுத்துவார். இது வழமையாக உதவி இயக்குநர்கள் கவனிக்கும் விஷயம். ஆனால் இதுபோன்ற சிறு அம்சங்களையும் நேரில் கவனித்து சரி செய்வது போன்ற விஷயங்கள், அவர் தனது தொழில்முறை பணிக்கேற்ப காட்டும் கட்டுப்பாட்டையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன,” எனத் தன் பரவசத்துடன் கூறுகிறார் ஆர்ஷா பைஜூ.