தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கின்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சித்தார்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய படம் ‘மிஸ் யூ’. என். ராஜசேகர் இயக்கிய அந்த படம், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு, நடிகர் சித்தார்த் தனது 40வது படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘3 பிஎச்கே’ எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில், சித்தார்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. இந்நிலையில், படக்குழுவினரால் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘3 பிஎச்கே’ திரைப்படம் ஜூலை மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.