சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். ‘கூலி’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், லோகேஷ் கனகராஜ் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில்,”ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் ஒன்றாக நடிக்கும் மாதிரியான ஒரு கதையை, அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் நான் கூறியிருந்தேன். அவர்கள் அந்தக் கதையை கேட்டபின், அதில் நடிக்க ஓகே என்று சொன்னார்கள்.
நான் கூறிய கதை, வயதான இரண்டு கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை பற்றியது. தற்போது அவர்கள் இருவரின் பிசினஸ் மிகவும் பெரியது. எனவே, இதை அவர்களே முடிவெடுக்க வேண்டும். ஆனால், இப்போது அதை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் என தெரிவித்துள்ளார்.