வரும் காலங்களில் நடிகர், நடிகைகள் இன்றி அவர்களின் தோற்றத்தை மட்டும் வைத்து படம் வெளிவரும் என்கிறார்கள். குறிப்பாக ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை அழைத்து படத்திற்கு தேவையான மேக்அப் போட்டு அவரை அனைத்து கோணங்களிலும் புகைப்படம் எடுத்தால் போதும் அவர் நடிக்காமலே அந்த படத்தை உருவாக்க முடியும்.இதை சாத்தியப்படுத்துவது போன்று தற்போது ஹிந்தியில் நைசா என்ற படம் தயாராகி வருகிறது. விவேக் அஞ்சலியா இயக்கி உள்ளார். காதல் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. ஏஐயில் உருவாக்கிய நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் மற்றும் அவர்கள் பேசும் வசனங்கள் படத்தில் இடம்பெறுகிறது. ரயில், விமானம், மலை, அருவி, நகரம், கட்டிடங்களும் ஏஐயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
