Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சிகிச்சைக்கு பிறகு தனது 131வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் சிவராஜ் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் சிவராஜ்குமார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’, தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சில மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு, நாடு திரும்பினார்.

தற்போது, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அவர் தயாராகி வருகிறார். குறிப்பாக, ‘கேம் சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு, ராம்சரண் நடிக்கும் 16வது படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஒரு நேரடி தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்ட பிறகு, அவரது 131வது படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். பெங்களூருவில் தொடங்கிய இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், ரசிகர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், வரும் 5ம் தேதி, ராம்சரணின் 16வது படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News