Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை‌… தீயாய் பரவிய தகவல் நடிகர் யோகி பாபு கொடுத்த விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, தற்போது வெறும் காமெடி வேடங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருக்கும் அவர், சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததாகவும், அவருடன் இருந்த உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வைரலானது.

இந்த செய்தியை மறுத்துள்ள யோகி பாபு, “எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. ஆனால், அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. எனினும், நாங்கள் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல் பரவியுள்ளது. இது முற்றிலும் தவறு என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தகவல் அறிந்த பலர், நண்பர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் என்னை தொடர்பு கொண்டு என் நலனை விசாரித்துள்ளனர். என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News