Monday, January 20, 2025

கடற்கரையில் பிங்க் நிற உடையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ஸ்ரேயா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய சினிமாவில் சில நடிகைகளே நாற்பது வயதுக்கு மேல் சென்ற பிறகும் அவர்களது அழகை மெயின்டெய்ன் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஸ்ரேயா. ரஜினிகாந்தின் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் செய்த ஒரு தவறின் காரணமாக இங்கு டாப் நடிகையாக உயர்வடைய முடியாமல் போனார். கடைசியாக வடிவேலு நாயகனாக நடித்த ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியிருந்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரிய் கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, ஒரு பெண் குழந்தையின் தாயாகியுள்ளார். அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி, தன்னுடைய இளமையான தோற்றத்தை காட்டி வருகிறார்.

நேற்று, பிகினி உடையில் சில புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். “எனது சிறுவயதிலிருந்தே அதே கிளாமருடன் இருக்கிறார்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ள நிலையில், ஸ்ரேயா இன்னும் இளமையாகவும் அழகாகவும் தோன்றுகிறார்.

- Advertisement -

Read more

Local News