Thursday, January 16, 2025

ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எப்படி இருக்கும? அஞ்சலி சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கற்றது தமிழ் மற்றும் அங்காடி தெரு போன்ற திரைப்படங்களில் தன் சிறந்த நடிப்பால் பிரபலமானவர் அஞ்சலி. ஒரு கட்டத்தில் சில காலம் நடிக்காமல் இருந்த அவர், தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் திறமையான நடிகை என்ற பெயரை பெற்ற அஞ்சலி, தனது சினிமா பயணத்தை கற்றது தமிழ் படத்தின் மூலம் தொடங்கினார். ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் அளித்த உணர்ச்சி பொங்கும் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. “நிஜமாதான் சொல்றியா?” என்ற அவரது உரையாடல், ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படுகிறது. அஞ்சலியின் திறமையை அறிந்த பலரும், அவரது எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்று அன்றே கணித்தனர் அது நிரூபணமும் ஆனது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏழு கடல் ஏழு மலை குறித்து கருத்து தெரிவித்த அஞ்சலி, “இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும். இப்படத்தை பற்றிச் சொல்ல அழகு என்ற வார்த்தையே சரியாக இருக்கும். கற்றது தமிழ் எனக்கு எவ்வளவு முக்கியமான படம் எனில், அதே அளவுக்கு ஏழு கடல் ஏழு மலை படமும் இருக்கும். இதற்காக நான், ராம், நிவின் பாலி உள்ளிட்ட அனைவரும் மிகுந்த உழைப்பை ஏற்றுக்கொண்டோம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News