Friday, January 3, 2025

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார் பிரபல கன்னட இயக்குனர் பிரேம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல கன்னட இயக்குநர் பிரேம், 1993-ம் ஆண்டு வெளியான “நிஸ்கர்ஷா” படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து சினிமாவில் துவங்கியவர். பின்னர், 2003-ம் ஆண்டு “கரியா” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தர்ஷன் கதாநாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவரது தற்போதைய இயக்குநர் முயற்சியாக “கேடி: தி டெவில்” படத்தை உருவாக்கி வருகிறார். இதில் துருவா சர்ஜா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவியது. இதனை உறுதிப்படுத்திய பிரேம், “ஆமாம், நான் இந்தியில் ஒரு புதிய படம் இயக்க இருக்கிறேன். கடந்த ஆண்டே பாலிவுட்டில் ஒரு ரீமேக் படம் இயக்க வேண்டும் என வாய்ப்பு வந்தது. ஆனால் நான் ரீமேக்கை விரும்பவில்லை. தற்போது புதிய படம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பை வழங்குவேன்,” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News