டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாகார்ஜுனா, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “கூலி” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “லோகேஷின் படங்களில் நான் ஒரு புதிய வடிவத்தை பார்க்கிறேன். அந்த தனித்துவம் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் திரைக்கதையிலும் உள்ளது. அவரிடம் என்னை விடுகிற சுதந்திரம் அதிகம். ஹீரோ அல்லது வில்லன் எப்படி நடக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, அது அவரின் வேலைசெய்யும் முறையின் சிறப்பான அம்சம்” என்றார்.