விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இக்கூட்டணி ‘லியோ’ என்ற திரைப்படத்திலும் இணைந்தது. லலித் தயாரிப்பில், அனிருத்தின் இசையில், கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படம் வெளியாகி இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், படத்தை தயாரித்த Seven Screen Studio, இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள்.
தற்போது லியோ திரைப்படம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஸ்பெஷல் பிடிஎஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். தற்போது இணையம் முழுவதும் இந்த 7 நிமிடங்கள் அடங்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.