Wednesday, October 16, 2024

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதரான ராஷ்மிகா மந்தனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடிகை ராஷ்மிகா மந்தனா படங்களில் நடித்துவருகிறார். தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘கீத கோவிந்தம்’, ‘புஷ்பா’ போன்ற படங்களில் நடித்த இவர், தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்.

கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து நடிகைகளின் ‘டீப் பேக்’ கவர்ச்சி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக ராஷ்மிகா மந்தனாவை உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்கான உத்தரவில், “ராஷ்மிகாவின் செல்வாக்கும் அர்ப்பணிப்பும் சைபர் கிரைமுக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும்” என தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News