முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகனாகிய முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தொடர்புடையவர், இவர் முரசொலி நாளிதழில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, இதழின் மேம்பாட்டிற்காக பல வேலைகளை செய்தவர்.

முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “முரசொலி பத்திரிகையில் சுமார் 50 ஆண்டுகள் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றி, ஜனநாயகக் குரலாக எழுதிய முரசொலி செல்வம், தனது எழுத்துகளால் பலரின் மனதில் இடம்பிடித்தார்.

அவர் ‘இது எங்க நாடு’, ‘திருட்டு ராஜாக்கள்’, ‘மாடி வீட்டு ஏழை’, ‘பாலைவன ராஜாக்கள்’, ‘புயல் பாடும் பாட்டு’ உட்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவர் 84 வயதான நிலையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது குடும்பத்தாருக்கு நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.