Saturday, October 5, 2024

தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு என தகவல்! #IDLYKADAI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் இயக்கத்தில் 4வது படமாக ‘இட்லி கடை’ என்கிற படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி, அவரே நாயகனாக நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார். டாரன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது.

இத்திரைப்படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார், அதே நேரத்தில் ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் நாயகியாக நடித்த நித்யாமேனன், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

சில நாட்களுக்கு முன்பு படக்குழு இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதற்கு முன்பாகவே, தேனி பகுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தீவிரமாக நடந்துவந்தது. தற்போதைய தகவல்களின் படி, இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாம். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News