மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை*, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தின் பெயர் *கடைசி உலகப் போர்*. இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் க்ளிம்ஸ் வீடியோ வரை அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது, மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, அது உறுதியாக இருப்பதாக ஆதி அறிவித்துள்ளார். அவர் ஒரு நேர்காணலில், இரண்டாம் பாகத்துக்கான கதை 100 சதவீதம் தயார் நிலையில் இருப்பதாகவும், முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், சில காட்சிகள் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பெரிய பட்ஜெட்டில் உருவாகும். இதில், ஏஐ மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதலே கதை மையமாக இருக்கும். ஆனால், இதன் ரன்னிங் டைம் குறைவாக இருக்கும் என அவர் கூறினார்.