ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு, அவர் நடிக்கும் அடுத்த படமாக உருவாகியுள்ளது “தேவரா”. இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார், மேலும் ஜான்வி கபூர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். சயீப் அலிகான் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரவிருக்கும் செப்டம்பர் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கடந்த சில நாட்களாக, தேவரா படக்குழு தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், தேவரா படத்தின் தயாரிப்பாளர், ஜூனியர் என்டிஆர், இயக்குநர் கொரட்டாலா சிவா ஆகியோருடன் துல்கர் சல்மான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் தனது வே பாரர் நிறுவனம் மூலம் தேவரா படத்தை கேரளாவில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.