தமிழ் சினிமாவில் “அயோக்யா”, “வேலன்”, “இரவின் நிழல்”, “கருடன்” மற்றும் இன்று வெளியான “கோழிப்பண்ணை செல்லத்துரை” போன்ற பல படங்களில் நடித்தவர் பிரிகிடா. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பலரும் தன்னை 30 வயது கடந்த நடிகை என்று கருதுவதால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “பவி டீச்சர்” கதாபாத்திரத்தில் நான் நடித்தபோது எனக்கு 19 வயது தான். அப்போது நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். அதற்கு பிறகு நான் செய்த அனைத்துக் கதாபாத்திரங்களும் மெச்சூரிட்டியானவையாக இருந்ததால், அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு நடித்தேன். அதனால் பலர் எனக்கு வயது அதிகம் என்று எண்ணுகின்றனர்.
இப்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள “கோழிப்பண்ணை செல்லத்துரை” படத்தில், என் வயதுக்கு ஏற்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இனி இளமையான கதாபாத்திரங்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க எண்ணுகிறேன்,” என்று கூறுகிறார் பிரிகிடா.