Saturday, September 14, 2024

வெளியானது ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி… வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் ஆண்டனி ! #HITLER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இறுதியாக நடித்த ‘ரோமியோ’ மற்றும் ‘மழைப்பிடிக்காத மனிதன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. தற்போது, ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ படங்களை இயக்கிய தனா இயக்கத்தில், ‘ஹிட்லர்’ எனும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியானது. ‘ஹிட்லர்’ படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

- Advertisement -

Read more

Local News