பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை ‘ரியல் ஹீரோ’ என மக்கள் கொண்டாடினர்.நேற்று நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடப்பட்டது.சோனுசூட்டின் ரசிகர்களில் ஒருவரான புருஷோத்தம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஹாக்கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.இந்த ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார். அதன்படி அவரது பள்ளியில் படிக்கும் 1200 மாணவர்களை சோனுசூட் உருவத்தில் அமரவைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதில் HBD REAL HERO என்று மாணவர்கள் அமர்ந்து சோனு சூட்டிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more