பொதுவாக சமூக வலைதளங்களில் கணக்கு எதுவும் வைத்திருக்காத நயன்; ஜவான் பட சமயத்தில் தனக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓபன் செய்தார். அதில் தன்னுடைய படங்கள், குழந்தைகள், பயணங்கள், பிற தொழில்கள் உள்ளிட்டவை தொடர்பான போஸ்ட்களை அதிகம் போடுவார். மேலும் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா படத்தின் விழாவில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு டார்க் நிற புடவை அணிந்து வந்த அவரை பார்த்த பலரும், வயசானாலும் கிளாமர் குறையலையே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் சூழலில் 39 வயதாகும் தனக்கு எப்படி உடல் இன்னும் ஃபிட்டாக இருக்கிறது என்பது தொடர்பாக நயன்தாரா இன்ஸ்டாகிராமில் சீக்ரெட் சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டயட் என்றால் பிடித்தவற்றை சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அது அப்படி இல்லை என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும்போது தெரிந்தது. தற்போது வீட்டில் செய்த உணவை சத்தாகவும், சுவையாகவும் சாப்பிடுகிறேன். ரசித்து சாப்பிடுவதன் காரணமாக ஜங்க் உணவுகள் மீது எந்த ஏக்கமும் எனக்கு வருவதில்லை. நான் உணவை பார்க்கும் முறையே மாறிவிட்டது” என குறிப்பிட்டிருக்கிறார்.