Tuesday, November 19, 2024

மலேசிய பிரதமரை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆரஏ.ஆர்.ரகுமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், மலேசியாவில் வரும் 27-ந்தேதி ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள தனது ரசிகர்களை ஏ.ஆர்.ரகுமான் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராகிமை ஏ.ஆர்.ரகுமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். இந்த சந்திப்பின்போது இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி உரையாடினோம் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News