தளபதி நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான கடைசிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் தற்போது நடந்து வருகிறது.இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நாடு திரும்ப உள்ளார்கள் தி கோட் படக்குழு.
விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தை நடித்து முடித்துவிட்டு அரசியலுக்கு செல்லவுள்ளார்.இந்நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிட்டாலும் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளார் என உறுதியாக சொல்லப்படுகிறது.இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்நிறுவனம் நடிகர் விஜய் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்ததால் விஜய் அந்த நிறுவனத்தோடு படம் தயாரிக்க போவதில்லை என்று சொல்லிவிட்டதால் அந்த நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியதாக செய்திகள் பரவி வந்தன.
தற்போது தளபதி69 படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது உறுதிப்படுத்தபாடத பல தகவல்கள் உலாவிக் கொண்டே இருந்தன.இப்படியிருக்க தளபதி 69 படத்தை எந்த நிறுவனமும் தயாரிக்க போவதில்லை என்றும் அந்த படத்தை நடிகர் விஜய்யே அவரின் சொந்த செலவில் தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தளபதி69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.