அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘இளையராஜா’. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் இளையராஜா பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி, வைரமுத்து, பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாசலம் என பலரின் பாத்திரங்களும் இடம்பெற உள்ளன. ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு, வைரமுத்துவாக விஷால், மணிரத்னமாக மாதவன் நடிக்க போகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இளையராஜா வாழ்க்கை வரலாறு மிக பெரியது. அதை ஒரே படத்துக்குள் சுருக்க முடியாது. அதனால், இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜா வேடத்தில் நடிக்கும் தனுஷ் ஒரு பாகத்துக்கு ஐம்பது கோடி என்றும் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து நூறு கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.