சேத்துமான் படத்தை இயக்கி பல விருதுகளை அள்ளியவர் தான் இயக்குனர் தமிழ். இவரோட அடுத்த படம் எலக்ஷன் இதில் உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் நடித்திருக்கிறார்.இவர் சமீபத்தில் வெளிவந்த ஃபைட் கிளப் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/sethu.jpg)
எந்த ஜேனரிலும் படம் பண்ணினாலும் அது தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர் தான் நான். சீசனுக்கு மட்டும் வந்து போகும் படமாக இல்லாமல் காலம் கடந்து பேசக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. எலக்ஷன் மாதிரியான படங்கள் என்பது கத்தியின் மீது நடப்பதை போல தான் எங்கேயும் எதையும் தேவையில்லாமல் திணிச்சிட முடியாது. சீரியசாக கதை எழுதினாலும் நகைச்சுவை அங்கங்கே சேர்த்து விடுவேன் அதே போல தான் சேத்துமான் படத்திலும் எங்கு காமெடி வைக்க முடியுமோ அங்கு வைத்தேன் என்றார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/wele.jpg)
நடிகர் விஜயகுமார் டைரக்ஷன், ஹீரோ, ப்ரோடக்ஷன் என எல்லா களத்திலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவர்தான் சூரரைப் போற்று படத்துக்கு வசனம் எழுதி இருந்தார். சமூகத்தைப் பற்றிய புரிதல் உள்ள அவரது ரைட்டிங் எனக்கு பிடிக்கும்.இந்த படத்திற்கு வேறு நடிகரை நான் சாய்ஸாக யோசிக்கவே இல்லை. இந்த மாதிரியான ஒருவர்தான் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் அவரை நடிக்கவும் வைத்து விட்டேன்.அரசியல் கதைகள் என்றாலே சில நடிகர்கள் ஓடிவிடுவார்கள்.இவர் கதை சொல்லி இரண்டாம் நாளே சரி என்று சொல்லிவிட்டார்.
இப்படத்தை தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் உடைய நாவலான பூக்குழி நாவலை படமாக்க இருக்கிறேன் இது புக்கர் பரிசுக்குரிய நெடும் லிஸ்ட்-ல் இடம் பெற்ற நாவல். அதில் நடிகர்கள் தர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளார்கள்.ஷூட் முடிந்து விட்டது போஸ்ட் புரொடக்ஷன் வேலை நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார் இயக்குனர் தமிழ்.