Wednesday, September 18, 2024

அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரசியலை நையாண்டியாக சொல்லும் கன்னி ராசி மற்றும் தர்ம பிரபு படங்களை எடுத்த இயக்குனர் முத்துக்குமரன், இவர் படைப்பில் சலூன் என்ற புதியபடம் உருவாகியுள்ளது.இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் கவிதா பாரதி.

இவர் சித்தி தொடருக்கு வசனம் எழுதியவர், அருவி படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, ரைட்டர் படத்தில் வில்லனாக பிரபலமான இவர் சலூன் படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அதில் சிங்கப்பூர் சலூன் இருக்க இதென்ன வெறும் சலூன் என்று அவரிடம் கேட்டதற்கு, இந்த படம் எப்பவோ ஆரம்பித்து விட்டதாகவும் சலூன் படத்தின் பாதி படப்பிடிப்பின் போது தான் சிங்கப்பூர் சலூன் வெளியானது.இது உள்ளூர் சலூன் தான் என நகைச்சுவையாக சொன்னார்.

இந்த படம் பாலிடிக்ஸ் படம். சுதந்திர போரட்டத்தை சைலன்டா நடத்துறதா வைலன்டா நடத்துறதானு ஊரு ரெண்டா பிரிஞ்சிடும், சைலன்ட ஆதரிக்குறவங்க சைடு வாக்கெடுத்து தலை சீவுவாங்க அந்து ஊரு சைடுவாருபட்டி, வைலன்ட ஆதரிக்குறவங்க தலையை நேரா சீவுவாங்க அவங்க ஏறுவாருபட்டி நான் ஏறுவாருபட்டியோட தலைவர். சைடுவாருபட்டி தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள் என்றார்.

இது இரண்டு ஊருக்கு இடையே நடுக்குற பிரச்சினை பற்றியும் தலைவர்கள் அங்க மக்களை எப்படி வச்சுருக்காங்க அப்புறம் சம கால அரசியலையும் பேசுற கதை தான் இந்த சலூன்.வில்லனா நடிப்பது தான் பிடிக்குமா என்ற கேள்விக்கு நல்லவனாக நடிப்பது போர் அடிக்கும் எனவே வில்லனாக நடிப்பது தான் பிடிக்கும் என்றார். எனக்கு காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை மணிவண்ணன் அவர்களை போல எல்லாம் கலந்த கேரக்டரில் நடிக்க மிகவும் விருப்பம் என கூறினார்.

மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர் அவர்களை பற்றிய கேள்விக்கு, இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்-ஐ கலகலப்பாக வைத்துக் கொள்வார்கள்.நாங்கள் சீரியஸாக இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் எதாவது பேசி சிரிக்க வைப்பார்கள் என்றார்.இத்தோடு திரைப்பயணத்தையும் குறித்து பகிர்ந்து கொண்டார்.

கிராமத்தில் இருந்து இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்தவன் பிரபல பத்திரிக்கையான நக்கீரனில் வேலை செய்து பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன் அப்போது ராதிகா அவர்களின் அறிமுகம் கிடைத்து சித்தி சீரியலுக்கு வசனம் எழுதினேன்.அப்போது எழுத்தாளர்களாக இருப்பவர்களை எழுத்தாளர்களாக மட்டுமே அடையாளப்படுத்துவார்கள் இயக்குனர் ஆவது கடினமாக இருந்தது இந்த பயத்தில் சீரியலை இயக்க ஆரம்பித்து திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்ததால் நடிகனானேன் என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News