Wednesday, September 18, 2024

த்ரிஷா தான் வேண்டுமென்று அடம் பிடித்த விஜய்? என்னதான் காரணம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் சென்று க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் விஜய்.தி கோட் படத்திற்கு வெங்கட் பிரபுவிடம் திரிஷா தான் ஹீரோயினாக வேண்டும் என விஜய் அடம் பிடித்ததாக தகவல்கள் உலாவுகின்றன.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் முடிந்து விட்டது இன்னும் இறுதி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மிச்சம். அவையும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் முடித்து ஒட்டுமொத்த சூட்டிங்கையும் முடித்து விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது படக்குழு.

தி கோட் படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இந்தியாவில் ஐந்து இடங்களில் நடந்து வருகின்றன.இந்த வேலைகள் எப்போதும் முடியும் என்று தெரியாததால் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல் முடியாமல் காத்திருக்கின்றனர்.

வில்ஸ்மித் இயக்கத்தில் 2019-ல் ஜெமினி மேன் என்ற படம் வெளிவந்தது. அந்த படத்தை தழுவி தான் இந்த படம் எடுக்கப்படுகிறது என தகவல் பரவியது ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு அதை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா அல்லது அனுஷ்கா அவர்களில் யாரையாவது ஒருவரை தேர்வு செய்யலாம் என யோசனை சொன்ன வெங்கட் பிரபுவிடம் இரண்டு பெயர்களுக்கும் விஜய் நோ சொன்னதாகவும், எனக்கு ஆல் டைம் ராசியான ஜோடி திரிஷாவை கேட்டுப்பாருங்கள் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்‌.

அதற்கு வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளரும் த்ரிஷா அவர்கள் அஜித், மணிரத்தினம் மற்றும் சிரஞ்சீவி என அடுத்தடுத்து இன்னும் சில ஆண்டுகளுக்கு மிகவும் பிசியாக உள்ள நிலையில் அவர்கள் எப்படி வருவார்கள் அதுவும் கெஸ்ட்ரோலுக்கு எப்படி வருவார்கள் என தயங்கி இருக்கின்றனர் ஆனால் விஜய்யோ நிச்சயம் வருவாங்க என்று கண் சிமிட்டி உள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News