Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இன்றைய சினி ஃபைட்ஸ்!

Share

- Advertisement -

விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்? பாடகரான விஜய் சேதுபதி…

- Advertisement -
- Advertisement -

1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்.

2) பாடகரான விஜய் சேதுபதி

கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், சாகிபா பாஸின் நாயாகியாகவும் , ஜிவா வில்லனாகவும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையில் விஜய் சேதுபதி ‘காதல் குமாரு வைரல் ஆனாரு…, என்ற பாடலை பாடியுள்ளார்.

3) வதந்திகளை நம்பாதீங்க – நடிகை பூஜா

ஆர்யாவின் திருமணத்தில் நடிகையான பூஜா கலந்து கொள்ளாமல் போனதை பல விதங்களில் பேசப்பட்டதை தொடர்ந்து, நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன் ஆர்யா எனக்கு போன் செய்து இருந்தார் அதை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே தவிர வதந்திகளை நம்பாதீங்க என்றுள்ளார்.

4) நித்தியாமேனனுக்கு காமெடி கதாபாத்திரம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நித்தியா மேனன். தற்போது விஷ்ணு வர்தனின் உதவி இயக்குனராக பணியாற்றிய காமினி எழுதி இயக்கும் காதல், காமெடி கலந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நித்யாமேனன். இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கின்றன.‌

5) மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘ரோமியோ’

கவரும் தலைப்பு, கதை, சமூக கருத்து என நடிப்பில் ஈர்க்கும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி மீரா விஜய் ஆண்டனி தங்களுடைய சொந்த ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மூலம் ரோமியோ என்ற படத்தை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத விஜய் ஆண்டனியாக நடித்துள்ளாராம்.இவருடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News