Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

இவர்தான் என் சிறந்த நண்பர்! பிரியா பவானி சங்கர் உருக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமான  பிரியா பவானி சங்கர்,   வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது, இந்தியன் 2, ஜிப்ரா, ரத்னம், பீமா, டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது காதலன் ராஜவேலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பையன் இருக்கிறாரே இவர்தான் என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சிரிக்கிறோம், சண்டை இடுகிறோம், அழுவோம். இருவரும் சத்தமாகவும் நம்பிக்கையுடனும் பல தவறான பாடல் வரிகளை பாடிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இருவருமே A &Z வேறு வேறு தான். ஆனாலும் என்னை அவர் எப்போதுமே திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் வித்தியாசமாக இருந்தாலும் அவரோடு நான் அன்பாகவும் ஜாலியாகவும் இருக்கிறேன். அதுபோல அவரோடு தான் நான் நிம்மதியாக உணர்கிறேன். அவரும் என்னோடு இருக்கும்போது சந்தோசமாக இருக்கிறார். அவரோடு நான் அமைதியாக உட்கார்ந்து ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தை பார்த்து என்னுடைய மனதில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் பேச முடிகிறது.

அதுவே எனக்கு போதும். இந்த வாழ்க்கையை நான் ஆனந்தமாக கடக்க கோடி மடங்கு போதும். என்னுடைய ராஜ்வேல்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News