Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விஜய்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி: தளபதி 69 தயாரிப்பாளர் யார்?  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து யுடியுப் சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் அமல்ராஜ் தெரிவித்ததாவது:

“விஜய்யின் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இதுகுறித்து அபிஸியலாக அப்டேட் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், இக்கூட்டணியில் தான் தளபதி 69 உருவாகும். கேங்ஸ்டர் ஜானரில் எடுக்க கார்த்திக் சுப்புராஜ் பிளான் செய்துள்ளார்.  அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

 

வாரிசு வெளியாகும் முன்பே  விஜய் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணையும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு இப்போது தான்  அது நடந்திருக்கிறது.

விஜய் இப்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தளபதி 69 படத்தை தொடங்க விஜய்யும் கார்த்திக் சுப்புராஜும் முடிவு செய்துள்ளார்களாம். இந்நிலையில், தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

பீஸ்ட் படத்துக்குப் பின்னர் சன் பிக்சர்ஸ் பேனரில் விஜய் நடிக்கவில்லை. இதனால் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன்படி தளபதி 69 வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் உருவாகும் என தகவல் கூறுகிறது” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News