Tuesday, November 19, 2024

“வெற்றி.. 5,600!”: சாந்தனு பாக்யராஜ் உருக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. ரசிகர்களிடையே படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக சாந்தனுவின் நடிப்பை பலரும் பாராட்டுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு பாக்யராஜ் உருக்கமான பதிவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகவும் உணர்வூப்பூர்வமாக உள்ளது. வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கு எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என 5,600 நாட்கள் ஆகியுள்ளன. இது உங்களால் தான். உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓடவைத்துள்ளது. இதற்காக நான் நன்றிகடன் பட்டுள்ளேன்” என சாந்தனு தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News