பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது முடிவாகவில்லை. சரத்குமார் நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ‘ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ள இயக்குநர் சேரன், அடுத்து சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு, பா.ம.க. நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதையை இயக்குவார் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.