Tuesday, November 19, 2024

விமர்சனம்:  நந்திவர்மன் 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்… செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமம்.. பல்லவ மன்னன் பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆளுகைக்கு உட்பட்ட இந்த கிராமம்  செல்வ செழிப்புடன் இருக்கிறது. தவிர இங்குள்ள அனுமந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தமானது.

இந்த கோயிலுக்குள் தங்கப்புதையல் இருக்கிறது. இதை கொள்ளையடிக்க, கோரா என்ற கொள்ளையன் வருகிறான். அவனை தோற்கடித்த மன்னன் நந்திவர்மன், தானும் இறந்துவிடுகிறான்.

தற்போதைய காலகட்டத்தில் போஸ் வெங்கட் தலைமையில் குழுவினர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ஊருக்கு வருகின்றனர். இதன் பின்பு அந்த ஊரில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

இறுதியில் தங்கப் புதையலை கண்டுபிடித்தார்களா,  ஊரில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு யார் காரணம் என்பதே நந்திவர்மன் படத்தில் கதை.

எஸ்.ஐ.யாக வரும் ஹீரோவாக சுரேஷ் ரவி, சிறப்பாக நடித்து உள்ளார். நிழல்கள் ரவி, போஸ் வெங்கட்  ஆகியோர் வழக்கம் போல் பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். தவிர நிழல்கள் ரவி, ஊர் தலைவராக வரும் கஜராஜ், குடிகாரராக வரும் முல்லை கோதண்டம் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

பெலிக்ஸ் இசையில் பின்னணி இசை சுவாரசியமாக இருந்தது, பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். செயோன் முத்துவின் ஒளிப்பதிவு மற்றும் சான் லோகேஸின் எடிட்டிங் படத்திற்கு பலம்.

பெருமாள் வரதனின் திரைக்கதை சுவாரஸ்யம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும்  வரலாற்று கதை நம்பும் படியாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலை தூண்டுகிறது.

ஆனாலும், தொடரும் காட்சிகள் அத்தனை ஈர்ப்பாக அமையவில்லை.  இதற்கு முக்கிய காரணம் படத்தில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் தான். சண்டை போடுவதில் தொடங்கி கோவிலை காட்டுவது வரை அனைத்து விஎப்எக்ஸ் செய்துள்ளனர் ,இது படத்தை விட்டு நம்மை விலகிப்போக வைக்கிறது. 

ஆனாலும் கிரைம் திரில்லர் படங்களை ரசிப்பவர்கள்   நந்திவர்மன் படத்தை பார்க்கலாம்.

 

 

 

- Advertisement -

Read more

Local News